வழிபாடு

திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவிலில் 5-ந்தேதி திருக்கல்யாண உற்சவம்

Published On 2023-04-27 08:35 GMT   |   Update On 2023-04-27 08:35 GMT
  • நாளை அதிகார நந்தி சேவை நடக்கிறது.
  • 3-ந்தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டையில் மிகவும் பழமைவாய்ந்த பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய சண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார திருப்பதிகங்களில் திருநாவுக்கரசரின் காப்பு திருத்தாண்டகத்தில் இந்த கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் பிரசித்த பெற்ற சித்திரை பெருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி மே 6-ந்தேதி வரை 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 28-ந்தேதி (நாளை) காலை 8 மணிக்கு அதிகார நந்தி சேவை, 30-ந்தேதி (ஞாயிறு) இரவு 10 மணிக்கு ரிஷப வாகன சேவை, 2-ந்தேதி (செவ்வாய்) காலை 6.30 மணிக்கு திருத்தேர் விதி உலா, 3-ந்தேதி (புதன்) மாலை 4 மணிக்கு 63 நாயன்மார்கள் உற்சவம், 4-ந்தேதி (வியாழன்) இரவு 9 மணிக்கு பிஷாடனர் உற்சவம், 5-ந்தேதி (வெள்ளி) இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்கள் நடக்கிறது.

சித்திரை பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக அதிகாரி த.கங்காதேவி, தக்கார் பி.கே.கவெனிதா ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News