வழிபாடு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2022-09-15 12:39 IST   |   Update On 2022-09-15 12:39:00 IST
  • தங்கரதம் பவனி, தீபாராதனை நடந்தது.
  • அத்தாழ பூஜை நடைபெற்றது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் சுமங்கலி பூஜை, இரண்டாம் நாள் அஸ்வதி பொங்கல் வழிபாடு நடைபெற்றது. நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி காலை கணபதி ஹோமம், உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, மதியம் உச்சபூஜை நடந்தது. மாலை 5.45 மணிக்கு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 6.15 மணிக்கு தங்கரதம் பவனி, தீபாராதனை நடந்தது.

இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழா நாட்களில் திங்கள்நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News