கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே, பனமா காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-07-02 14:16 GMT   |   Update On 2024-07-02 14:16 GMT
  • உருகுவே மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
  • பனமா இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று காலை இரண்டு போட்டிகள் நடைபெற்றன. குரூப் "சி"யில் இடம் பிடித்துள்ள பனமா- பொலிவியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பனமா 3-1 என பொலிவியாவை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் பனமா வீரர் ஜோஸ் பஜார்டோர் முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் பனமா 1-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது நேர ஆட்டம் தொடங்கிய நிலையில் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் பொலிவியா வீரர் புருனோ மிரண்டா கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக பனமா வீரர் குயெர்ரேரோ 79-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மேலும், 91-வது நிமிடத்தில் செசர் யானிஸ் கோல் அடிக்க பனமா 3-1 என வெற்றி பெற்றது.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உருகுவே- அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் 2-வது பாதி நேர ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் மத்தியாஸ் ஆலிவெரா கோல் அடிக்க உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.

அதன்பின் அமெரிக்கா கோல் அடிக்க முயற்சித்தது. அதற்கு பலன் கிடைக்கவில்லை. உருகுவே அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் உருகுவே 1-0 என வெற்றி பெற்றது.

"சி" பிரிவில் உருகுவே 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. பனமா இரண்டு வெறறி, ஒரு தோல்வி மூலம் 6 புள்ளிகள் பெற்றி 2-வது அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

அமெரிக்கா (ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 3 புள்ளிகள்), பொலிவியா (3 போட்டிகளிலும் தோல்வி) காலிறுதி வாய்ப்பை இழந்தன.

Tags:    

Similar News