யூரோ கோப்பை: காலிறுதிக்கு முன்னேறியது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி
- ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. போர்ச்சுகல் அணி வெற்றிக்கு ரொனால்டோ முதல் கோல் அடித்து அசத்தினார். மறுபுறம் போர்ச்சுகல் அணி கோல் கீப்பர் டியோகோ கோஸ்டா மூன்று பெனால்டி ஷூட்-அவுட்களை தடுத்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை தொடர்களில் ஏழாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை எந்த அணியும் இத்தனை முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.