கால்பந்து

7 நாடுகள்.. 13 ஆயிரம் கி.மீ... ரொனால்டோவை சந்திக்க சைக்கிளில் வந்த சீன ரசிகர்

Published On 2024-10-28 12:47 GMT   |   Update On 2024-10-28 12:47 GMT
  • கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.
  • ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார்.

உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து ஆட்டத்தில் சிறந்த வீரராக வலம் வரும் இவரை நேரில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வகையில் சீன ரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரொனால்டோ, கடந்த பிப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டது. அவரை பார்க்க ஆவலாக இருந்த சீன ரசிகர் காங் இதனால் மிகவும் வருத்தமடைந்தார். இதனையடுத்து அவரை நேரில் பார்க்க சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டார்.

அதன்படி சீனாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சைக்கிளில் வந்து ரொனால்டோவை சந்தித்துள்ளார். இந்த பயணத்தை கடந்த மார்ச் 18-ந் தேதி சீனாவில் தொடங்கிய அவர் 7 நாடுகளை கடந்து அக்டோபர் 20-ந் தேதி சவுதி அரேபியாவை வந்தடைந்தார். கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.

இறுதியாக ரொனால்டோவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ரொனால்டோ ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியையும் காங் பரிசாக பெற்றுக் கொண்டார்.


Tags:    

Similar News