இனிப்பான கரும்பில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்...
- கரும்பில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
- கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பொங்கல் திருவிழாவின் கதாநாயகனான கரும்பில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. நாம் தெரிந்து கொள்வோமா...?
1. உடனடி ஆற்றல்: கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.
2. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்: கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகச் செய்யும்.
3. மன அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
4. புற்று நோய் வராமல் தடுக்கும்: கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பிளவனோய்டுகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.
5. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
6. கல்லீரலின் ஆரோக்கியம் : கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகுங்கள்.
7. வயதாவதை தடுக்கும் : கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.
8. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் : கரும்பில் அதிக அளவில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
9. உடல் எடையினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
10. ரத்த அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.
கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்
கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தையாமின், ரிபோபிளவின், புரதம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.
கரும்பு ஏன் இனிக்கிறது?
கரும்பில் சுக்ரோஸ் என்ற சர்க்கரை வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச்சுவையை தருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரை இந்த கரும்புச்சர்க்கரைதான்!