செய்திகள்

ஒட்டப்பிடாரம் தொகுதி ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி

Published On 2016-06-07 13:57 IST   |   Update On 2016-06-07 13:57:00 IST
தபால் ஓட்டில் முறைகேடு நடந்துள்ளதால் ஒட்டப்பிடாரம் தொகுதி ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று கிருஷ்ணசாமி பேட்டியளித்துள்ளார்.
சென்னை:

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து தேர்தல் முறைகேடு சம்பந்தமாக புகார் மனு அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலையாகும். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது.

எனது தொகுதியில் தபால் ஓட்டில் முறைகேடு நடந்துள்ளது. முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே இங்கு பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்.

நிறைய வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துதான் ஜெயித்துள்ளார். எனவே வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட பணத்தை வெற்றி பெற்றவரின் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்.

எனது மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நியாயம் கிடைக்க கோர்ட்டை அணுகுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News