செய்திகள்

தூத்துக்குடி கலவரத்துக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்

Published On 2018-05-23 04:51 GMT   |   Update On 2018-05-23 04:51 GMT
தூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். #SterliteProtest #PRPandian #BanSterlite
மன்னார்குடி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தூத்துக்குடி கலவரம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பேரழிவுகளை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு, போராட்டக்காரர்களோடு தமிழக முதல்வர் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த அவசர கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதி வழி போராட்டத்திற்கு மதிப்பளிக்க தவறியதும், காவல் துறை மூலம் அடக்கு முறையை கையாண்டதுமே கலவரத்திற்கு காரணமாக அமைந்து விட்டது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் வாழ்வதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் அணுகுமுறை மக்களுக்கு தொடர்ந்து கோபத்தை ஏற்படுத்தி வந்தது. ஆலை நிர்வாகத்தினரோடு சேர்ந்து கொண்டு மக்களை பிளவுப்படுத்தும் செயலில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இக்கலவரத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. #SterliteProtest #Thoothukudi #PRPandian #BanSterlite

Tags:    

Similar News