செய்திகள்
இணையத்தில் லீக் ஆன 2019 ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்
ஹூன்டாய் நிறுவனத்தின் 2019 எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூன்டாய் எலான்ட்ரா 2019 ஃபேஸ்லிஃப்ட் மாடல் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் கார் உற்பத்திக்கு தயாராக இருப்பது தெரியவந்துள்ளது. வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் புதிய கார் அதிகம் மேம்படுத்தப்பட்டு புதிய ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
2019 ஹூன்டாய் எலான்ட்ரா மாடலின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், க்ரோம் டீடெயிலிங், புதிய மற்றும் கூர்மையான தோற்றம் கொண்ட முக்கோண ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ரோஜெக்டர் லைட்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்களை சுற்றி எல்இடி பொசிஷன் லைட்கள் இருபுறமும் சிக்னல் லைட்களை ஆன் செய்யும் படி வைக்கப்பட்டு இறுக்கிறது.
முன்பக்க பம்ப்பர் மிகவும் கூர்மையாகவும், முக்கோன வடிவம் கொண்ட ஃபாக்லேம்ப்கள் மற்றும் சிறிய ஏர்-இன்டேக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டுகளில் ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூப் போன்ற ரூஃப்லைன் கொண்டிருக்கிறது. இதன் மாடல் பெயர் பேட்ஜிங் ஹூன்டாய் லோகோவின் கீழ் மாற்றப்பட்டு இருக்கிறது. இது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
இதன் டெயில் லேம்ப்களும் மாற்றப்பட்டு புதிதாக காட்சியளிக்கிறது. இதன் நம்பர் பிளேட் பம்ப்பருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் கேபின் எவ்வாறு இருக்கும் என்பது தெளிவாக இல்லை. எனினும் உள்புறத்திலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 2019 ஹூன்டாய் எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். சர்வதேச மாடலில் புதிய பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம், குறிப்பாக ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 154 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.
புகைப்படம்: நன்றி Gepann.com