செய்திகள்
விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோன்டா ஆக்டிவா
இந்திய விற்பனையில் ஹோன்டா ஆக்டிவா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள நிலையில், மற்றொரு புதிய சாதனையை ஆக்டிவா படைத்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோன்டா நிறுவனம் நவராத்திரி தினத்தில் மட்டும் 50,000 ஹோன்டா ஆக்டிவா யுனிட்களை விற்பனை செய்திருந்தது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக ஹோன்டா ஆக்டிவா இருக்கிறது.
இந்திய சந்தையில் 20 லட்சத்திற்கும் அதிகமான யுனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ள ஒரே நிறுவனமான ஹோன்டா இருக்கிறது. மேலும் இந்த சாதனை வெறும் ஏழு மாதங்களில் எட்டியுள்ளது. ஹோன்டா ஆக்டிவா முதல் 20 லட்சம் யுனிட்கள் விற்பனையாக ஏழு ஆண்டுகள் ஆனது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இரண்டாவது முறையாக 20 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ள ஹோன்டா ஆக்டிவா இம்முறை ஏழே மாதங்களில் இலக்கை எட்டியுள்ளது.
ஒவ்வொரு 9 நொடியிலும் ஒரு இந்திய குடும்பம் புதிய ஹோன்டா ஆக்டிவா மாடலை வாங்குவதாக ஹோன்டா தெரிவித்துள்ளது. இந்திய வீடுகளில் காணப்படும் மிகவும் பிரபல மாடலாக இது இருக்கிறது. அதிக அம்சங்கள் மற்றும் குறைவான விலையில் கிடைப்பதால் ஹோன்டா ஆக்டிவா விற்பனை அதிகரித்துள்ளது.
2012-13 ஆண்டில் 7.3 லட்சம் ஆக்டிவா யுனிட்களை விற்பனை செய்திருந்த ஹோன்டா 2017-18 ஆண்டில் 20 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளது விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் 2001-ம் ஆண்டு அறிமுகமான ஹோன்டா ஆக்டிவா மாடலில் 102சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அறிமுகமான குறைந்த காலகட்டத்திலேயே 50,000 யுனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டன. பின் 2004-05 காலகட்டத்தில் 5 லட்சம் எனும் விற்பனையை கடந்தது. பின் அடுத்த ஆண்டிலேயே 10 லட்சம் யுனிட்களை விற்பனை செய்திருந்தது. 2009-ம் ஆண்டு ஆக்டிவா மாடலில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டது.
அதன்படி 109.2சிசி இன்ஜின், காம்பி பிரேக் சி்ஸ்டம் மற்றும் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டகு, 2012-13 ஆண்டுகளில் ஆக்டிவா விற்பனை 50 லட்சத்தை கடந்தது. பின் 2013-14-ம் ஆண்டில் ஹோன்டாவின் புதிய ஹோன்டா இகோ தொழில்நுட்பத்துடன் (HET) அதிக மைலேஜ் வழங்கியது.
புதிய ஆக்டிவா மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இத்துடன் வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் மொபைல் சார்ஜிங் போர்ட், ஆட்டோமேடிக் ஹெட்லைட் ஆன் அம்சமும் பல்வேறு புதிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.