உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேசிய போது எடுத்த படம். 

மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து 1000 வாகனங்களில் செல்ல வேண்டும் - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு

Published On 2023-07-27 09:09 GMT   |   Update On 2023-07-27 09:09 GMT
  • தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது
  • அ.தி.மு.க. நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி:

அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி மதுரையில் ரிங்ரோடு, மாநாடு திடலில் நடைபெறுகிறது. அதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்வது குறித்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.

அலுவலகத்தில் நடைபெற்றது

இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பேசியதா வது:-

வரலாற்று சிறப்பு மிக்க அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நாடளவில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்து வருகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்நின்று செய்து வருகிறார். மாநாட்டில் பங்கு கொள்வது குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வருகிற 29-ந்தேதி (சனிக்கி ழமை) தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறுகிறது.

இதில் துணை பொதுச்செய லாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் திண்டுகல் சீனிவாசன் எம்.எல்.ஏ., துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சர்களுமான கே.எ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ., வேலுமணி எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம் எம்.பி., மகளிர் அணி செயலாளர் வளர்மதி, செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., அமைப்புச்செயலாளர் கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., டாக்டர் வி.பி.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிற அளவில் மிக பெரிய ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலிருந்து பஸ்கள், சிற்றுந்து, கார் என 1000 வாகனங்களில் எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் மதுரை மாநாட்டிற்கு எழுச்சியோடு செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்க ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, டாக்டர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், ராஜ்நாரயணன், சவுந்திர பாண்டி, காசிராஜன், பகுதி செயலாளர் முருகன், சேவியர், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன், பில்லாவிக்னேஷ், கே.ஜே.பிரபாகர், வெயிலூ முத்து, நகர செயலாளர்கள் திருச்செந்தூர் மகேந்திரன், இணை செயலாளர் லட்சுமணன், பேரூராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், காசிராஜன், செந்தில் ராஜகுமார், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திர மூர்த்தி, கவுன்சிலர் வெற்றிச்செல்வன், வக்கீல்கள் ரவிந்திரன் , சுகந்தன் ஆதித்தன், ஆன்ட்ரூமணி, பிள்ளை விநாயகர், முனிய சாமி, சரவணபெருமாள், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், டைகர் சிவா தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், பாலஜெயம், சாம்ராஜ் மற்றும் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News