உள்ளூர் செய்திகள்

 மஞ்சள் - குங்குமம் கொண்டு வரையப்பட்ட 108 விநாயகர் ஓவியத்தை பார்வையிடும் பள்ளி மாணவ -மாணவிகளை படத்தில் காணலாம்.

அரசு அருங்காட்சியக போட்டியில் மஞ்சள்,குங்குமத்தால் வரைந்த 108 விநாயகர் ஓவியங்கள் -மாணவி அசத்தல்

Published On 2022-08-20 14:45 IST   |   Update On 2022-08-20 14:45:00 IST
  • பாளை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • தொடர்ந்து காபிதூள் மற்றும் பல்வேறு பொருட்கள் மூலம் மாணவ-மாணவிகள் வரைந்த ஏராளமான ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

நெல்லை:

பாளை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

விநாயகர் சதூர்த்தியை யொட்டி மஞ்சள்,குங்குமம் கொண்டு விநாயகர் ஓவியம் வரையும் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் மாணவி ஸ்ரீநிதி என்பவர் கின்னஸ் சாதனை முயற்சியாக மஞ்சள், குங்குமம் மூலம் 108 விநாயகர் ஓவியங்களை வரைந்தார்.

தொடர்ந்து காபிதூள் மற்றும் பல்வேறு பொருட்கள் மூலம் மாணவ-மாணவிகள் வரைந்த ஏராளமான ஓவியங்கள் அருங்காட்சி யகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி செய்திருந்தார்.

Tags:    

Similar News