ஏற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 151 மனுக்கள் பெறப்பட்டன
- சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.
- ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.
முகாமில் ஏற்காடு தாசில்தார் தாமோதரன், தனி தாசில்தார் தீபசித்தரா, துணை தாசில்தார் ஹரிபிர சாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அந்த மனுக்களில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், இறப்புச் சான்றிதழ் உட்பட்ட மனுக்களில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதை தொடர்ந்து தீர்வு காணப்பட்ட மனுக்களின் சான்றிதழ்களை பயனாளர்களுக்கு நேற்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா வழங்கினார்.
மேலும் மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா கூறினார்.