உள்ளூர் செய்திகள்
கோவை மாநகராட்சி பகுதிகளில் 2 நாட்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள்-கமிஷனர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சி பகுதிகளில் 2 நாட்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள்-கமிஷனர் பிரதாப் தகவல்

Published On 2023-02-25 15:16 IST   |   Update On 2023-02-25 15:16:00 IST
  • 25 ல் காந்தி மாநகர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும் மற்றும் வார்டு எண் 28ல் காமதேனு நகர்வார்டு அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
  • பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்த வேண்டும்.

கோவை,

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

கோவை மாநகராட்சியில் நடப்பு 2022-23 நிதியாண்டின் 2-ம் அரையாண்டிற்கான காலம் 31.03.2023 வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த பொதுமக்களின் வசதியை கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் இன்று மற்றும் 26- ந் தேதி தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.5ல் வளியாம்பாளையம் பகுதி, வார்டு எண்.6-ல் வீரியம்பாளையம் பகுதி, வார்டு எண். 7 மற்றும் 8 ல் காளப்பட்டி நேரு நகர் பள்ளியிலும், வார்டு எண் 56 ல் சூர்யா நகர் - ரெயில்வே கேட் பகுதியிலும், வார்டு எண். 57ல் ஒண்டிபுதுார் நெசவாளர் காலனி பகுதியிலும் நடைபெற உள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.17 ல் தேவி கார்டன் டி.வி.எஸ். நகர் ரோடு, கவுண்டம்பாளையம், வார்டு எண்-35 ல் தேவாங்க நகர்-கற்பக விநாயகர் கோவில் எதிர்புற புதிய மாநகராட்சி கட்டிடப்பகுதியிலும், 26-ந் தேதி அன்று வார்டு எண்-36 ல் நியூ தில்லை நகர் 5-வது கிராஸ் - குடியிருப்போர் நல சங்கம் வளாகத்திலும், வார்டு எண்.75ல் இன்று சீரநாயக்கன்பாளையம்- நேதாஜி வீதி-மாரியம்மன் கோவில் வளாகத்திலும், 26-ந் தேதி அன்று அருந்ததியர் காலனியிலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.100 கணேசபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.88 ல் குனியமுத்தூர்-தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் வளாகத்திலும், வடக்கு மண்டலம் வார்டு எண்-15 சுப்ரமணியம்பாளையம் வார்டு அலுவலகம் அருகிலும், வார்டு எண்-18 புது தோட்டம் பழைய ரேசன்கடை அருகிலும், வார்டு எண் -19 ல் மணியகாரம்பாளையம்- அம்மா உணவகம், வார்டு எண்-21ல் ஜனதா நகர்- எம்.ஜி.ஆர் நகர் பகுதியிலும், வார்டு எண்-25 ல் காந்தி மாநகர் - அரசு மேல் நிலைப்பள்ளியிலும் மற்றும் வார்டு எண் 28ல் காமதேனு நகர்வார்டு அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா, சங்கனுார் நாராயணசாமி வீதியிலும், வார்டு எண் 62 சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், வார்டு எண்.63ல் ஒலம்பஸ்- 80 அடிரோட்டில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும், வார்டு எண் 80ல் கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும் மற்றும் வார்டு எண் 84ல் ஜி.எம். நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

மேலும், வருகிற 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக ஏனைய நாட்களில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News