பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்கு 2 புதிய பேட்டரி வாகனம்
- மொத்தம் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயன்படுத்தலாம்.
- பேட்டரி வாகனம், 450 கிலோ வரை குப்பைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேரூர்,
பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்குப்பைகளை அள்ளுவதற்காக, சிறுதுளி மற்றும் பிரிக்கால் நிறுவனம், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய பேட்டரி வாகனங்களை வழங்கி உள்ளது.
மொத்தம் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயன்படுத்த கூடிய இந்த பேட்டரி வாகனம், 450 கிலோ வரை குப்பைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் நடந்தது.
இதில், சிறுதுளி தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிய பேட்டரி வாகனத்தின் சாவியை, ஊராட்சித் தலைவர் என்.பி. சாந்திபிரசாத் மற்றும் அன்னதான சேவகர் வி. பிரசாத் ஆகியோரிடம் வழங்கினர்.
அப்போது, ஊராட்சி செயலர் மனோகர், தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.