புதுச்சத்திரம் அருகே 1,000 கிலோ இரும்பு திருடிய 2 பேர் கைது
- புதுச்சத்திரம் அருகே 1,000 கிலோ இரும்பு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சைக்கிளில் கொண்டுவந்தது சுத்திகரிப்பு ஆலையில் திருடியது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
கடலூர்:
சிதம்பரம் பகுதி புதுச்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடிேய உள்ளது. புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பழைய இரும்புகளை ஏற்றிவந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசார ணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 24), அதே ஊரைச் சேர்ந்த நகர்பாதைத் தெருவைச் சேர்ந்த தங்கமணி (25) என்பது தெரியவந்தது. இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்தது சுத்திகரிப்பு ஆலையில் திருடியது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சுமார் 1,000 கிலோ இரும்பு கைப்பற்ற ப்பட்டது. 2 பேரையும் கைது செய்த போலீசார் திருட்டு வேலைகளுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.