உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- சங்கராபுரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, விரியூர் கிராமத்தை சேர்ந்த ரோசாலி (வயது60) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
- போலீசார் ரோசாலியை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக வேலாயுதம்(52) என்பவரையும் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ஜெயமணி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் கிராமத்தை சேர்ந்த ரோசாலி (வயது60) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த வேலாயுதம்(52) என்பவரையும் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.