பண்ருட்டி அருகே இரும்புகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
- பண்ருட்டி அருகே இரும்புகளை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவுபடி, சிறப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு உள்ளிட்ட போலீசார் பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணா கிராமம் அரசுப்பள்ளி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அந்தப் பகுதியில் இருந்த மின்வாரிய அலுவலகத்தில் இருந்த இரும்பு திருடியது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் கீழ்கவரபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திரவீரன் (வயது 30) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலும் 2 பேர் இவருடன் சேர்ந்து இரும்பு திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் (24), கீழ்கவரப்பட் டை சேர்ந்த சத்திய தாசன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிலோ இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்னர்.