உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது
- மூஞ்சிக்கல் பகுதியில் தமிழ் தேசிய புலிகள், தமிழர் திராவிடர் மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
- சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக சுப்பையா என்பவர் பணிபுரிந்து வருகிறார் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூய்மை பணியாளர் ஜோசப் ஹென்றி என்பவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மூஞ்சிக்கல் பகுதியில் தமிழ் தேசிய புலிகள், தமிழர் திராவிடர் மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது . தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.