செய்திகள்

பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற பெண் திடீர் மாயம்

Published On 2016-05-22 10:30 GMT   |   Update On 2016-05-22 10:30 GMT
பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற பெண் திடீர் மாயமானதால் இது குறித்து கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

ஈரோடு:

கோபி அருகே உள்ள புஞ்சை துரையம் பாளையம் இந்திரா நகரைசேர்ந்தவர் பசுவராஜ். இவரது மனைவி இந்திராணி (வயது 32).

இந்திராணி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு புறப்பட்டார்.

இந்திராணியை அவரது கணவர் பசுவராஜ் கோபி பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து பஸ்சில் ஏற்றி விட்டார்.

இதன்பிறகு மாலையில் வெகு நேரம் ஆகியும் இந்திராணி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரிய வில்லை.

இது பற்றி பசுவராஜ் கோபி போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இந்திராணியை தேடி வருகிறார்..

Similar News