செய்திகள்

பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Published On 2016-06-06 20:19 IST   |   Update On 2016-06-06 20:19:00 IST
பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93–வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93–வது பிறந்தநாளையொட்டி பெரம்பலூர் கவுதமபுத்தர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி மற்றும் முதியோர் இல்லம், துறைமங்கலம் அன்பகம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி ஆகியவற்றில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சீருடையும், 50க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு வேட்டி, சேலை ஆகியவற்றை முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா வழங்கினார். அதை தொடர்ந்து பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, மதியழகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், வக்கீல்கள் ராஜேந்திரன், செந்தில் நாதன், மாரி கண்ணன், மாவட்ட அணி செயலாளர் மகாதேவி, ஹரிபாஸ்கர், நகராட்சி கவுன்சிலர் அப்துல் பாரூக், வாசுரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News