செய்திகள்
திருச்சி, கே.கே.நகரில் வீட்டில் புகுந்த பாம்பால் பரபரப்பு
திருச்சி கே.கே.நகரில் வீட்டில் 6 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.
கே.கே.நகர்:
திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள அய்யப்ப நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43), எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (40). நேற்று ரமேஷ் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வித்யா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அலறி அடித்து கொண்டு வெளியே வந்த வித்யா இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து திருச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே நிலைய உதவி அலுவலர் ஞானசேகர் தலைமையில் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் 6 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது தெரியவந்தது. பின்னர் நவீன கருவிகள் மூலம் அந்த பாம்பை பிடித்து கே.கே நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.