செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 பேருக்கு வருவாய் உதவியாளராக பணி உயர்வு

Published On 2016-06-07 15:43 IST   |   Update On 2016-06-07 15:43:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 கிராம நிர்வாக அலுவலர் உள்பட 23 பேர் வருவாய் உதவியாளர்களாக பணி உயர்வு பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 14 இளநிலை தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள் என 23 பேரை வருவாய் உதவியாளர்களாக பணி உயர்வு அளித்தும், 9 வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்தும் கலெக்டர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:– கீரனூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த அசோக்குமார் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலக வருவாய் உதவியாளராகவும், போளூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் பதவி உயர்வு பெற்று போளூர் தாலுகா வருவாய் உதவியாளராகவும், கீழ்பென்னாத்தூர் தாலுகா கடம்பை கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலக வருவாய் உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 9 கிராம நிர்வாக அலுவலர்கள் 14 இளநிலை உதவியாளர், தட்டச்சர்கள் என 23 பேர் வருவாய் உதவியாளர்களாக பணி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

வெம்பாக்கம் தாலுகா அலுவலக வருவாய் உதவியாளராக பணிபுரிந்த ராஜேஷ் செய்யாறு சிப்காட் (அலகு–4) உதவி கலெக்டர் அலுவலக வருவாய் உதவியாளராகவும் அங்கு பணிபுரிந்த அப்பாராயன், செய்யாறு தனி வருவாய் ஆய்வாளராகவும், ஆரணி தாலுகா அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்த கலைவாணி காலியாக உள்ள செய்யாறு சிப்காட் (அலகு–6) கோட்ட கலால் அலுவலக தனி வருவாய் ஆய்வாளராகவும், வந்தவாசி தாலுகா வருவாய் அலுவலக வருவாய் உதவியாளர் குமரவேல் காலியாக உள்ள செய்யாறு அலுவலக திண்டிவனம்–நகரி புதிய ரெயில்வே இருப்பு பாதை திட்ட தனி வருவாய் ஆய்வாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 9 வருவாய் உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News