செய்திகள்
விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு
தர்மபுரி மாவட்டத்தில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு பிறப்பித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அந்த பகுதியை சேர்ந்த சிலர் தரக்குறைவாக பேசி மானபங்கப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கு தொடர்பான சாட்சி விசாரணைக்கு ஆஜராகும்படி தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜனுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் சம்மனை பெற்றுக்கொண்டு கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சோமன்ராஜனுக்கு வாரண்டு பிறப்பித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டார்.