செய்திகள்
அலங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பலியான முதியவர் யார்?: போலீசார் விசாரணை
அலஙகாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பலியான முதியவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி பகுதியில் சின்ன இலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் பிச்சன் (வயது28). இவர் இருசக்கர வாகனத்தில் ஊமச்சிகுளம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 60 வயது மதிக்கதக்க ஒருவர் எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே சென்றுவிட்டார்.
இதில் அவர் படுகாய மடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனில்லாமல் 60 வயது முதியவர் இறந்து விட்டார். இருசக்கர வாகனத்தில் சென்ற பிச்சன் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைக்கு பெற்று வருகிறார்.
அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் ஊர், பெயர், விபரம் என்னவென்று விசாரித்து வருகின்றனர்.