திருச்சி அருகே முதியவர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 5 பேர் கைது
நெ.1டோல்கேட்:
திருச்சி உத்தமர்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (வயது75) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாம்புகணபதிக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 20– ந் தேதி பாம்புகணபதி மற்றும் இவருடைய மகன்கள் ராஜேந்திரன், சங்கர், செல்வம், சப்பானி, இவரது மகன் பெரியதம்பி, விஜய்ஆகியோர் செல்லத்துரை பார்த்திபன் மற்றும் கிருஷ்ணமூர்த்தியை சராமரியாக கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கினர் இதில் செல்லதுரை பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுகந்தி கொள்ளிடம் டோல்கேட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கவிதா சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கோவிந்தராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி தலைமறைவானவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாம்பு கணபதி, சப்பானி, பெரியதம்பி, சங்கா, விஜய் ஆகியோரை கைது செய்து திருச்சி குற்றவியல் துணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 5 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.