செய்திகள்

ஒட்டன்சத்திரம் பகுதி பார்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை

Published On 2016-07-23 20:04 IST   |   Update On 2016-07-23 20:04:00 IST
ஒட்டன்சத்திரம் பகுதி பார்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி, விருப்பாட்சி, 16–புதூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் உள்ளன.

டாஸ்மாக் கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். டாஸ்மாக் கடைகளில் மானிட்டர், வி.எஸ்.ஓ.பி. கோல்கொண்டா, டேநைட் போன்ற மதுபாணங்களும், கிங்பிசர், 11 ஆயிரம், 12 ஆயிரம், பிரிடிஷ், கால்ஸ்பெர்க் போன்ற பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகள் பொதுவாக இரவு 10 மணிக்கு மூடப்படும். இதை பயன்படுத்தி ஒட்டன்சத்திரம் பகுதிகளில உள்ள பார்களில் ரூ.95 வகை மதுபானங்களை ரூ.120க்கும், ரூ.105 வகை மதுபானங்களுக்கு ரூ.130–ம் பார் வைத்திருப்பவர்கள் அதிகளவு வசூல் செய்வதாக மது பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News