செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே அம்மன் கோவிலில் நகை-உண்டியல் கொள்ளை
கும்மிடிப்பூண்டி அருகே அம்மன் கோவில் நகை, உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ஏ.என்.குப்பத்தில் எட்டியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இன்று காலை கோவிலில் முன்பக்க கதவு பூட்டு, கருவறை பூட்டு உள்பட 5 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் தாலியில் இருந்த 1 பவுன் நகை மற்றும் உண்டியல் பணம் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
நள்ளிரவில் கோவிலின் பூட்டுகளை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும் கோவிலில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பஞ்சலோக சாமி சிலையை திருட முயற்சி செய்துள்ளனர்.
அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் சிலையை திருடாமல் சென்று உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.