செய்திகள்

சென்னையில் அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Published On 2016-07-26 14:41 IST   |   Update On 2016-07-26 14:41:00 IST
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் 7 அடி உயர வெண்கல சிலையை மத்திய அரசு நிறுவி உள்ளது. அது நாளை திறக்கப்படுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் மனம் கவர்ந்த அப்துல்கலாமுக்கு எல்லா தரப்பினரும் புகழ் அஞ்சலி செலுத்துகின்றனர். சென்னை சூளையில் செயல்பட்டு வரும் பொது நலமன்றத்தின் சார்பில் அப்துல்கலாமுக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

4 அடி உயர பீடத்தின் மீது 3 அடி உயரத்தில் மார்பளவிலான அப்துல்கலாம் சிலை அமைந்துள்ளது. நினைவு நாளையொட்டி நாளை இந்த சிலைக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

சென்னையில் அப்துல் கலாமுக்கு வைக்கப்பட்ட முதல் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News