செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி அருகே முதியவரை தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடியை சேர்ந்தவர் துவாரராஜன் (வயது65), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதீவிராஜன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் துவாரராஜன் அப்பகுதியில் நடந்து வந்த போது பிரதீவிராஜன், கோபால கிருஷ்ணன், பிரபுராஜ், துரையரசன், ராஜேஷ், தரணி ஆகிய 6 பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர். மேலும் அவரின் வீட்டு மதில்சுவரையும் உடைத்து உள்ளனர்.
இது குறித்து துவாரராஜன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அமுதராணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.