செய்திகள்
சேலம்- தர்மபுரி இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
தமிழகம் முழுவதும் 50 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் சேலம் மாநகரம், தர்மபுரியில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் 50 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் சேலம் மாநகரம், தர்மபுரியில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
சேலம் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினி, கோவை மேற்கு மண்டலத்திற்கும், சேலம் மாநகர நிலஅபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி கோவை மேற்கு மண்டலத்திற்கும், சேலம் செவ்வாய்பேட்டை இன்ஸ் பெக்டர் திருமேனி கோவை மேற்கு மண்டலத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை ரெயில்வே இன்ஸ்பெக்டர் மணி கண்டன் சேலம் மாநகரத்திற்கும், தர்மபுரியில் பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் சேலம் மாநகரத்திற்கும், சென்னையில் பணியாற்றி வரும் ராஜசேகர் சேலம் மாநகரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.