செய்திகள்
திருவாரூர் அருகே கல்லூரி பேராசிரியர் தற்கொலை: போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே மனமுடைந்த கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள கூடூர் நல்லப்பன் நகர் பகுதியை சேர்ந்த மோகன் மகன் போரஸ் புருஷோத்தமன் (வயது29). இவர் மன்னார் குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது உறவினர் பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த போரஸ் புருஷோத்தமன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் பூங்கோதை திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.