செய்திகள்
உடன்குடியில் தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மேடை பாடகி மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
உடன்குடி:
உடன்குடி கிறிஸ்தியா நகரத்தை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகள் செலினா (வயது 24). பட்டதாரியான இவர் கிறிஸ்தவ கச்சேரிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.
கடந்த 28-ந்தேதி செலினா திசையன்விளையில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செலினாவின் தாய் பொன்ரானி குலசேகரன் பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து மாயமான செலினா எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரேனும் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார்களா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்.