செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விதி மீறியதாக 788 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2016-10-16 20:06 IST   |   Update On 2016-10-16 20:06:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாலை விதியை மீறியதாக 788 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ. 78 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாலை விதியை மீறியதாக 788 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ. 78 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மாவட்டத்தில் குற்றங்கள் தடுக்கும் வகையில் கர்நாடக மாநில எல்லையில் கும்மளாபுரம், அந்திவாடி, ஜூஜூவாடி, கக்கனூர், பேரிகை ஆகிய இடங்களிலும், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய இருமாநில எல்லைகளில் நேரலகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களிலும்,

ஆந்திர மாநில எல்லையில் குருவிநாயனப்பள்ளி மற்றும் வரமலைகுண்டா ஆகிய இடங்களிலும் என 9 இடங்களில் மாவட்ட காவல் துறை சார்பில் நிரந்தர சோதனை சாவடிக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினந்தோறும் வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று போலீசார் நடத்திய வாகன சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 30 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 23 பேர் மீதும், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 391 பேர் மீதும், உரிய ஆவணம் மற்றும் பல்வேறு காரணங்களால் 344 பேர் என மொத்தம் 788 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அபராத தொகையாக ரூ. 78ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

Similar News