செய்திகள்

நாகர்கோவிலில் வெல்டிங் கடை உரிமையாளர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

Published On 2016-11-21 23:08 IST   |   Update On 2016-11-21 23:08:00 IST
நாகர்கோவிலில் வெல்டிங் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் ஜாண்டானி (வயது42).
வெல்டிங் கடை உரிமையாளர். இவர் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகே வெல்டிங் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதனால் ஊட்டுவாழ்மடம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் வெல்டிங் ஒர்க்ஷாப் பணிகள் முடிந்த பின்பு குடும்பத்துடன் சொந்த ஊரான களக்காடு சென்றார். அங்கிருந்து நேற்று இரவு மீண்டும் நாகர்கோவில் வந்தார்.

வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன.

மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளைபோயிருந்தது.

அதிர்ச்சி அடைந்த ஜாண்டானி இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர்.
ஜாண்டானி வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக கைரேகை நிபுணர்களும் அங்குச் சென்று கொள்ளையரின் தடயங்கள் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினர்.       

Similar News