தா.பேட்டை அருகே அரசு பஸ் மோதி பெண் பலி
தா.பேட்டை:
தா.பேட்டை அடுத்த திருத்தலையூர் மேலக்கொட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (வயது 30). இருவரும் தா.பேட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சோளதட்டைகள் ஏற்றிகொண்டு மேலக்கொட்டம் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது துறையூர் மெயின்ரோட்டில் தாண்டவம்பட்டி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறி இறங்கிய போது பின்னால் வந்த அரசுபேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சித்ரா படுகாயம் அடைந்து கணவர் கண் எதிரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சித்ரா பிரேதத்தை கைப்பற்றி துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.