ஊத்துக்கோட்டையில் வெயில் கொடுமைக்கு 2 தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள். பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊத்துக்கோட்டையில் வெயில் கொடுமைக்கு 2 தொழிலாளிகள் பலியாகி உள்ளனர்.
ஊத்துக்கோட்டை காக்கவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னய்யன் (55). கூலி தொழிலாளி. நேற்று அங்குள்ள மருந்து கடைக்கு சென்றார். அப்போது வெயிலின் தாக்கத்தை தாங்காமல் சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் ஊத்துக் கோட்டை பால் ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ராமு (43). அதே பகுதியில் உள்ள வயலுக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.