திருவாரூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மருவத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மாதவன் ராஜ் (வயது 30) இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்த அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கல்யாண சுந்தரபுரம் பாண்டவயிறு கரையில் பழுதடைந்த பொதுப் பணித்துறை அலுவலகம் கட்டிடம் உள்ளது. அங்கு சென்ற மாதவன் ராஜ் அந்த கட்டிடத்தில் இருந்தே ஒரு அறையில் பழுதடைந்த நிலையிலிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை அங்கு வந்த சிலர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தற்கொலை செய்து கொண்ட மாதவன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாதவன்ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.