செய்திகள்

ஓசூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-31 15:10 IST   |   Update On 2017-05-31 15:11:00 IST
ஓசூரில் மாட்டிறைச்சி தடை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்:

அகில இந்தியா மஜ்லிஸ் இத்யாதுல் முஸ்லிமின் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடை செய்துள்ள மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அசார் தலைமை தாங்கினார். ஓசூர் நகர தலைவர் ஆசிப் முன்னிலை வகித்தார்.

இதில், கட்சியின் மாநில இணை செயலாளர் இம்தியாஸ், தலைமை கழக பேச்சாளர்கள் முகமது இக்பால், சம்சுதீன், விழுப்புரம் மண்டல தலைவர் முஜிபுர் ரஹிமான் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மேலும் இதில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், மாட்டிறைச்சி தடை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

Similar News