செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலத்தில் சரியாக தண்ணீர் வரவில்லை எனகூறி காளியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, தர்மன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கடைத்தெருவில் சாலை மறியல் செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கமல்ராஜ் மற்றும் ஊராட்சி தனி அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் கிடைக்க ஏற்ப்பாடு செய்வதாக உறுதியளிப்பின் சாலைமறியல் கைவிடப்பட்டது.
இதனால் திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.