செய்திகள்

புகையிலை எதிர்ப்பு தினம்: வேலூர் கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள்

Published On 2017-05-31 16:58 IST   |   Update On 2017-05-31 16:59:00 IST
வேலூரில் கட்டுபாடுகளை மீறி புகையிலை விற்ற கடைகளுக்கு அபாராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் சுரேஷ் தலைமையில் மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று வேலூர் பழைய பஸ் நிலையம், பெண்லேன்ட் ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, விதிகளை மீறி பொதுமக்கள் கண்களில் படும்படி புகையிலை பொருட்களை வைத்து கடைகளில் விற்பனை செய்தல், புகையிலை விளம்பர போஸ்டர்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தடை செய்யபட்ட 7 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

Similar News