செய்திகள்
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை: தஞ்சை கோர்ட்டு உத்தரவு
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கீழதூண்டி விநாயகம் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் கவிராஜன் (வயது28). ஆட்டோ டிரைவர். ஆடுதுறையை அடுத்த தியாகராஜபுரம் வடக்குதெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் கலைவாணி(23) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
பள்ளிக்கு மாணவ- மாணவிகளை ஆட்டோவில் கவிராஜன் ஏற்றி செல்வது வழக்கம். அந்த ஆட்டோவில் கலைவாணியும் பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் கவிராஜனும், கலைவாணியும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த திருமணத்தை கலைவாணியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கவிராஜனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். இதனால் கீழதூண்டிவிநாயகம் பேட்டையில் இருவரும் வசித்து வந்தனர். சில நாட்கள் இவர்களது மணவாழ்க்கை சந்தோஷமாக சென்றது.
பின்னர் வரதட்சணை கொடுக்கவில்லை என்று கலைவாணியை கவிராஜன் கொடுமைப்படுத்த தொடங்கினார். தினமும் இந்த கொடுமை நீடித்ததால் மனம் உடைந்த கலைவாணி 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி எலி மருந்தை தின்று விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.
உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306-ன்(தற்கொலைக்கு தூண்டுதல்) கீழ் கவிராஜன் குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் கண்ணகி கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.