செய்திகள்
திருச்சி அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல்: 71 பேர் கைது
திருச்சி அருகே மதுக்கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 71 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்பிலியபுரம்:
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் இருந்த மதுக்கடையை சில மாதங்களுக்கு முன்பு புடலாத்தி கிராமத்திற்கு இடம் மாற்றினர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 முறை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் 2 முறை நடைபெற்றது. மேலும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த மதுக்கடையை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் புடலாத்தி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாகராஜ் என்பவர் தலைமையில் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர். அவர்களை, உப்பிலியபுரம் போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள், மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டு உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தனர்.
மேலும் அந்த மதுக்கடையை மூடக்கோரி அவர்கள் துறையூர்- சேலம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அதனையும் மீறி சாலை மறியல் செய்ய முயன்றதால், அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 57 பெண்கள், 14 ஆண்கள் என மொத்தம் 71 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மதுக்கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் புடலாத்தி கைகாட்டியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.