செய்திகள்

பாபநாசத்தில் மழை: மரம் விழுந்து கட்டிடம் சேதம்

Published On 2017-06-24 22:43 IST   |   Update On 2017-06-24 22:43:00 IST
பாபநாசத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.

பாபநாசம்:

பாபநாசத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பி மீது மரம் முறிந்து விழுந்ததால் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்ததால் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், சிறப்பு நிலை முகவர் மணிவண்ணன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை சரி செய்து மீண்டும் மின் இணைப்பு கொடுத்தனர்.

Similar News