செய்திகள்
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடும் வறட்சி நீடித்து வந்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே விவசாயிகள் செய்து வந்தனர்.
இந்த ஆண்டும் கேரளாவில் மழை பெய்தபோதும் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை.
தேனி மாவட்டத்திலும் கடும் வெயில் வழக்கத்துக்கு மாறாக கொளுத்தியது. இதனிடையே கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 110.90 அடியா உள்ளது. 225 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே திறந்து விடப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 31.10 அடியாக உள்ளது. மலைப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து 148 கன அடியாக உயர்ந்துள்ளது. 40 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 30.40 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 71.50 அடியாக உள்ளது. 16 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தம பாளையம், தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக நீர் இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.