செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2017-08-19 17:04 IST   |   Update On 2017-08-19 17:04:00 IST
சங்கரன்கோவில் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு மாவிலியூத்து கிராமத்தை சேர்ந்தவர் மைனர்சாமி (வயது40). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. 4 குழந்தைகள் உள்ளனர்.

மைனர்சாமிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. பல இடங்களில் மருத்துவம் செய்தும் தீரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த மைனர்சாமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சின்ன கோவிலான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News