செய்திகள்

கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: 4 பேர் மீது வழக்கு

Published On 2017-11-01 12:18 IST   |   Update On 2017-11-01 12:19:00 IST
கன்னியாகுமரி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தை அடுத்த பொட்டல்குளத்தைச் சேர்ந்தவர் தங்கலிங்கராஜா. இவரது மகன் ஆனந்த். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்துள்ளார். அடிக்கடி அந்த மாணவியை சந்தித்து தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்த் தன்னுடன் வராவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி, அவரது மோட்டார்சைக்கிளில் ஏறினார்.

ஆனந்த் மாணவியை மோட்டார்சைக்கிளில் உவரி அருகே மறைவான பகுதிக்கு கடத்திச் சென்றார். அங்கு மாணவியை திருமணம் செய்வதாக ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நள்ளிரவில் மாணவியை அதே மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு வந்து அவரது வீட்டு முன்பு கொண்டு விட்டு விட்டு தப்பிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், ஆனந்தின் வீட்டுக்கு சென்று முறையிட்டார். அங்கிருந்து ஆனந்தின் தந்தை தங்கலிங்கராஜா, அவரது மற்றொரு மகன் அஜித், தம்பி சுதன் ஆகியோர் மாணவியின் தாயாரையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஆகியோர் விசாரணை நடத்தி மாணவியை கற்பழித்த ஆனந்த், மாணவியின் தாயாரை மிரட்டிய தங்கலிங்கராஜா, அஜித், சுதன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல தென்தாமரைகுளம் அருகே பெண்ணை கற்பழித்த சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தென்தாமரைகுளம் அருகே உள்ள தேரிவிளையைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான செல்வராஜ் (54) என்பவர் வீடு புகுந்தார். அவர் கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை கற்பழித்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண், வேலை முடிந்து வந்த தனது கணவரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரது கணவர் தென்தாமரைகுளம் போலீஸ்நிலையத்தில் செல்வராஜ் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

செல்வராஜால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆகிறது. அவரது கணவர் கட்டிடத் தொழில் செய்து வருகிறார்.

Similar News