செய்திகள்

ராமநாதபுரம் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

Published On 2017-11-01 15:38 IST   |   Update On 2017-11-01 15:39:00 IST
மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி பலியானார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே யுள்ள ரமலான் நகரைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மகள் உம்மல் சிபாயா (வயது 10). அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த மாதம் 20-ந் தேதி உம்மல்சிபாயா காய்ச்சலால் அவதிப்பட்டாள். உடனடியாக அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினாள்.

அதன் பின்னரும் காய்ச்சல் ஏற்பட்டது. ரத்த பரிசோதனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உம்மல் சிபாயா பரிதாபமாக இறந்தாள்.

Similar News