செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்

Published On 2018-02-07 15:06 GMT   |   Update On 2018-02-07 15:06 GMT
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு அளித்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். நீலமேகன் வரவேற்றார். நிர்வாகிகள் பெருமாள், வேலுச்சாமி, சின்னப்பொன்னு, மங்கை, ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முத்து, அர்ச்சுனன், குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பெண் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டப்பணியை அனைத்து ஏழை, எளிய குடும்பங்களுக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். முதியோர்களுக்கு உதவித்தொகையை வழங்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் அலுவலர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர். #tamilnews

Similar News