செய்திகள்

கார்த்தி சிதம்பரம் கைது - மதுரையில் காங்கிரசார் போராட்டம்

Published On 2018-03-01 15:58 IST   |   Update On 2018-03-01 15:58:00 IST
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர். தங்கராமன் தலைமையில் கார்த்தி சிரம்பரம் கைதை கண்டித்து யானைக்கல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பால முருகன், நிர்வாகிகள் ராகுல் கிருஷ்ணன், ஜின்னா, முத்தியார், செய்யது பாபு, ரவிச்சந்திரன், பாஸ்கர், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News